ஆப்பு வைக்க போறோம்






<< February 2010 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01 02 03 04 05 06
07 08 09 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28


வெப்பில் பிலிம்
ஓவராய் காட்டுபவர்க்கும்
ஊர்வதை ஊதி பெரிதாக்கி
பறப்பதாய் சொல்பவர்க்கும்
சான்ஸ் தேடித்தேடி
சந்திலே சுயபுராண சிந்து பாடுபவர்க்கும்
இலக்கிய சுக்கை
இடித்து குடித்துவிட்டதாய்
இறுமாந்து இருப்பவர்க்கும்
இலக்கண பேய்பிடித்து
தலைகனம் ஏறியவர்க்கும்
ஆரிய திராவிட மாயையில்
அல்லலுற்று உழல்பவர்க்கும்
தலித்தை சுரண்டியபடி
தலித்தியம் பேசுபவர்க்கும்
பெண்டாட்டியை மதிக்காமல்
பெண்ணியம் பாடுபவர்க்கும்
ஜால்ரா அடித்தபடி
ஜோரா கைதட்டுபவர்க்கும்
தமிழ் வாந்தி
தமிழ் மலஜலம் கழிக்க சொல்வோர்க்கும்
முற்போக்கு பேசுகிற
பிற்போக்குவாதிக்கும்
இலவசமாய் எமது பிராண்ட்
'தமிழ் ஆப்பு' வைக்கப்படும்.





If you want to be updated on this weblog Enter your email here:

Blogdrive


Wednesday, May 19, 2004
டங்டனக்கா கசனு டமில் சொல்லுது லிசனு

கசனுனு ஒத்தர் கீராருபா
அல்கு டமில்ல அல்லாரும்
அவுத்து வுடனும்னு
ஒருதபா மர்த்தடில எய்தினாரு
யாரோ புண்யவான்
உம்பேர பாத்தாலே தெரிது
உன் டமில் லவ்வுனு
கொரலு வுட்டாப்ல

சரி வுடு நய்னா
டமில் காதல் கேசு
இதுனு நென்ச்சிகினேன்
அதுக்கேத்தாமாரி
வெண்பா எய்திட்டிருந்தாரு
நடுவால
வம்பாவும் ஆரம்பிச்சுட்டாரு
மர்த்தடில
எவனும் புதுக்கயுத பத்தி
பேசகொடாது
மரபுகயித உசத்தினு பேசனும்னு
பட்டிமன்றத்துல
வேர சைடு கிலாப்சு வாங்க
கொர்லு வுடகொடாது
அப்டி இப்டினு
ஆட்டிடியூடு பிராப்லமுசா
அவுத்து வுட்டாரு
மர்த்தடில மக்கல்சு
அப்பப்போ பதில் சொன்னாக
அப்பாலிக்கி
மர்த்தடிய அபீட்ல வுட்டாருமாரிகீது
ஆல காணம்
ஒரு வைரசு போச்சினு நானும்
சந்தோசபட்டுகினேன்

மனம் திருந்திய மைந்தனா
ஹரி ஹன்னா
மர்பிலக்கியம் குரூப்பு
ஷ்டார்ட்டு பன்னிகீராரு
முன்னமாரி எரிஞ்சி வுலாம
எள்ளி சிரிக்காம
கொஷ்சன் கேட்டா
பேஜி கன்குல பதில் வுட்ராரு
சம்டைம்சு
சோக்கா கீது
சம்டைம்சு லாங்கா கீது
அத்த வுடு
ஏதோ இத்த பன்ராரேனு
சந்தோசபடுவியா

இங்கயும் கசனு
தொல்ல தாங்கல அப்பு
மதியக்காவை மொதல்ல
மர்த்தடி மாரி பேசாதேனு
கார்னரு பன்னாரு கசனு
மதியக்கா கீதே
அது
கறி தின்னு
எலும்பு ஒதுக்கர புலி
சமாலிபிகேசன் போட்டு
கசன ஓரம் கட்டிட்டாக
அப்பாலிக்கா
ஜெயசிரீ மாமிகிட்ட
கொரகண்டுபொடிக்க
ஆரம்பிச்சுட்டாரு கசனு

ஜெயசிரீ மாமிகீதே
அது தகரடப்பா மாரி
சொம்மா சவுண்டு வுடும்
உல்லுகுல்லே வெகுலி
ஆர்வக்கோலாருலே
நாவல் சைசுக்கு
லெட்டர் எய்தும்
ஷ்கோலு போர
புல்ல கன்க்கா
மாசகனக்குல ஆர்க்யூ பன்னும்
சின்வயசுல நல்லா
படிச்ச புல்ல மாரிகீது
ஆனாலும்
சிவாஜி கனக்கா
ஓவர் ஆக்டிங் அடக்கம்

கசனு கையில மாட்டிகினு
முலிக்குது ஜெயசிரீ மாமி இப்போ
ஜெயசிரீ எது எய்தினாலும்
கேனதனமா புரிஞ்சுண்டு
கேல்வி கேக்கராப்ல கசனு
மர்பில்கியம் நட்த்துர பெர்ய மன்சா
என்ன சொல்லி இருக்கனும்
கசனை பிரைவேட்டா
கால் பன்னி
அம்பி உலராதே
பொருமையாப் படினு
சொல்லி இருக்கனும்
ஆனா அப்டி சொன்னா
கசனு அவுங்கலுக்கு
முதுகு சொரிரது
காலியாய்டும்னு
கன்டும் கானாம
அடக்கி வாசிக்கராக

ஜெயசிரீ பித்துகுலி
பலயமாரி
தப்பா சொல்லிருந்தா
கசனு மன்னிக்கனும்னு
சாரி கேக்கர லிஷ்டுல
கசனையும் சேத்துகிட்டு
எல்க்கிய டிஷ்கசனு பன்னுது

ராமனு லச்சுமனு
விபீஷனனு அனுமனுனு
இன்னா ராமாயனம்பேசி
இன்னா பிரயோசனம்
கன்னு முன்னால நட்கிர
பிராப்லம் பிக்ஸ்பன்னி
கசனை அட்க்க முடிலனா

அத்தான் நய்னா
கசன் பெசலு
இன்னிக்கி ஆப்புல
அஞ்சு கிலோ மூள
அஞ்சு கிலோ
சென்சு ஆப்பு ஹியூமரு
கசனுக்கு பார்சலேய்


Posted at 09:52 pm by aappu
Comments (11)

ஜெய் லலிதா தாசரோட இட்லிவட பாலிடிக்சு

குரு மாலனு
சைடு எட்துக்கினு
பாலிடிக்சு கூவுராரு
புட்ச்சா எத்துகரோம்
இல்லினா
வேலைக்காவாது வாத்யாரேனு
ஆப்பு வெச்சிட்ரோம்

சிசுயன் ரைட்டர்பாரா கீராரே
நியூட்ரலுனு கூவிகினு
பாலிடிக்சு பன்ராருபா

குரு மாலன் சாரு
ஒருதபா ரைட்டர்பாராவ
ஜெய் லலிதா தாசன்னு
எய்திட்டாரு
அப்போ அட்ச்சிபுட்ச்சி
ஓடியாந்து
நானு ஜன்நாய்க்தாசனுனு
கொர்லுவுட்டுச்சி சிசு பாரா

இன்னா மேட்டருன்ரியா
பலய குருடி
கதவ திரடினு ஆய்போச்சி
அத்தான் மேட்டரு

சோன்யா பிஎம்ஆனா
பப்லிக்கு
பிட்சா துன்னனும்னு
கன்டுபுச்சாரு ரைட்டரு
நல்லகாலம் அப்பு
முஸ்லீமு பிஎம்ஆய்ந்தா
இன்னா ஆவுரது
பப்லிக்கு
சுன்னது பன்னிகனும்னு
எய்திருப்பாரு
தப்பிச்சோம்
இப்டியே போனாக்க
பொம்பல பிஎம்மானா
பப்லிக்கு
பொடவ கட்டிகனும்
அயிரு பிஎம்மானா
பூனூலு போட்டுகனும்னு
அவனவன்
அரிவைகாட்டி எய்திருந்தா
நாடு தாங்குமா

இன்னாமோ ரைட்டருக்கு
தேவியான பிராடுமைண்டு
வர்ல அதுனால பிச்சாபாலிடிக்சு
பன்ராருனு பாத்தா
ஜெய்லலிதாக்கு பலயமாரி
கொடிபுட்ச்சிட்டாரு

டிபீட்டு பாத்து
அம்மாவுட்ட அனவுன்ஸ்மென்ட
வெல்கமுபன்னி
அம்மா இப்டி நெர்ய
சரித்திரம் படைக்கனுமுனு
எய்திகீராரு
அம்மா பன்ன
அநியாயம் கரெக்டு
பன்னிகீது
அத்தவரிக்கும் பாராட்டனும்
இதுல இன்னா
சரித்திரம் செஞ்சிகீது அது
திருடன் திருட்ன திங்சு
ரிடனு பன்னினா
பன்னினானேனு
சந்தோசபடுவியா
அதவுட்டுட்டு
அம்மா ஹிஷ்டரி பன்ராங்கோனு
ஹிஷ்டிரியா வந்தாமாரி
எய்துவியா

ரைட்டருபாரா வால்க
அவுருபன்ர நியூட்ரலு
இட்லிதோசஇடியாப்ப
பாலிடிக்சு வால்க


Posted at 12:34 am by aappu
Comments (2)

Wednesday, May 12, 2004
கெளப்பும் காவிகச்சியும்

கெளப்பை
பெராமனாள் மடமுனாக
பெராமின்சு நெராயபேரு
ஆயில் மெம்பரு
அதுநாலனு நென்ச்சேன்

பெராமனாலு மடமுனாகுட
தேவலாம்போல கீது
சின்குத்தூசி
ஞாணி
மாலன்னு
பெராமின்சுல
மதம் புடிக்காதவுங்கல
காட்லாம்

ஆனாக்க
உல்லதும் போச்சுடா
நொல்லகன்னான்ர மாறி
முறுக்கர் பிலிமே தேவலனு ஆய்டிச்சி
காவிகச்சிக்கு
ஏசண்டாட்டம் அங்க
எய்தராரு தெருமல

அவுரு இருக்கரது பாரின்ல
பாரினரு பிராப்லம்னு கூவராரு
சோனியா வரகூடாதாம்
இவுரு அமெரிக்கா வரகூடாதுனு
அமெரிக்கனு சொன்னா
அடிக்கபோனாலும்
போய்ருவாரு மாரிகீது

கலிநீரு எலக்சனுல கெலிக்கலனா
நாடு உருப்படாது
வோட்டு போடாத பப்லிக்கு
உருப்படாதுனு சாபம் வுடுவாரு
அந்த கனக்கா
ஆந்திரால
காவிகச்சி அல்யன்சு
கெலிக்கலனு
ஆந்ராக்கு அல்லிவுடராரு சாபமு

காவிகச்சிக்கு
கொடிபுடி தெருமல
ஆனாக்கி
டிபீட்ட
ஜெண்டில்மெனாட்டம்
எத்துக்க கத்துக்க
மெடிடேசனு யோகம்னு
டென்சனு குரைக்க
ஏதும் பன்னப்பு
இல்லனா
ப்லடு பிரசரு ஏர்ரமாரி
நியூசு படிக்காத

ஏழய நென்க்காம
கம்யூட்டருல பிலிமு காட்ன
அன்னாச்சி ஆட்டம்
அய்தராபாத் சிட்டிலயே
கழண்டுகிச்சு தெருமல

எலிக்சனுல
கெலிக்கரது
காலியாரது
அரசியலுல சகசமப்பு
ரொம்ப பீலிங்கான
ஊர்க்கு போய்
பிஜெபில சேந்து
கரசேவ பன்னு
அமெரிக்கால உக்காந்துனு
வோட்போட்ட பப்லிக்க
இன்சல்ட்டு பன்னாத


Posted at 09:02 am by aappu
Comments (4)

Friday, May 07, 2004
மாலன்க்கு டாங்சு

ஆப்பு வளி
அய்யா பெரியார் வளி
மாலன் வளி
அய்யா கலிநீரு வளி

அந்த அய்யா வளில
வாக்போர நம்பல
இந்த அய்யா வளில
டாக்பன்ர மாலன்
தெசைகல்ல பாராட்டி
எலுதிகீராரு
அவுருக்கு
டாங்சு சொல்லி
சலாமு வெச்சிகினு
ஆப்பு வெக்கிர
டூட்டி கண்டின்யு
பன்னுவோம்

எம்பி ஆனாலும்
ஆப்பை மரக்ககொடாது
மாலன் சாருனு
அப்லிகேசனு போட்டுருவோம்
பார்லிமெண்டுல
பேசாத எம்பிக்கு
ஆப்புவெக்கனும்னா
சொல்லி அன்ப்புங்கோ சார்
வெச்சிருவோம்


Posted at 10:48 pm by aappu
Comments (6)

Tuesday, April 20, 2004
பெர்சுக போடும் பைட்டு

மர்த்தடிலிம் கெளப்புலிம்
சின்பசங்க அடிச்சுகும்பொது
எலிவடலருந்து
சிப்பிவரீக்கும்
புலாகுல அட்டுவைசு
ஆப்பு வெச்சாக
சான்சு கெடச்சா
பெர்ய மன்சன் ஆக்ரதை
விடுவாங்லா யாரும்
ஆலாலகண்டா
அட்வைசுதாண்டானு
பாடிகினு நின்னாக

மொனிவரு குரூப்புல
நடக்குது பாரு
சூப்பரு பைட்டு
பெர்சுங்க போட்டா
கம்முனு குந்திகினு
பாக்ராங்கோ அம்மாம்பேரும்

உன்ன கண்டி
கோல்டன் ஓல்டு
ஸ்ஸாகலருக்கி புடிக்காம
போச்சுனா அம்புட்டுதேன்
கட்சிமாரி
கவுக்கரதுக்கு டைமு
பாத்துகினே இருப்பாரு
மசுரா புடுங்கரோமுனு
வொகாபுலரி கத்துகுத்தாரு
அன்னிக்கி
யார அப்டி திட்னாரோ
அவுருகூட அலைன்சுபோட்டு
கொமாருக்கு
தெராவிடகுத்து வுடுராரு
இன்னிக்கி

டைமுக்கேத்தாமாரி
அவுரு நெர்யகுத்து வுடுவாரு
சங்கராச்சாரி வால்கனுவாரு
காவிகச்சி ஒல்கனுவாரு
சக்தி அருலுனுவாரு
பெரியாரு வலி
தெராவிட்டுனுருவாரு
இண்டர்வலிலே
அவுரு அசெட்டை
அம்பேல் பன்னவன்
அஸ்ராலஜி சொல்ரேனுவாரு

கொமாரும் கொரஞ்சவருல்ல
ஸ்ஸ்காலரும் கொரஞ்சவருல்ல
தெராவிடிஸ்டுசும் கொரஞ்சவங்கல்ல
அல்லாமே
ஒரு பாலன்சாயி
ஓடுது நய்னா
வேனும்போது யூசு பன்னிக்கோ
வேனானா போட்டு தாக்கு
இத்தான் பாருமுலா
ஒத்தர வுட்டு
ஒத்தரு இருக்கவும் மொடியாது
டமில் நண்டுமாரினு வச்சிக்க

இன்னாவோ போ
சிர்சுங்க பைட்டுபோட்டுகினா
நிரைகுடம் தலும்பாதுனு
பிகிலு அடிக்குராங்க
நிரஞ்சாதானே தலும்பரதுக்குனு
கேக்க தோனுது
இவுக பன்ர
சின்னபுல்லதனம்

கெட்டாலும்
பெர்சுக பெர்சுகனு
சொல்ரியா
சலாமு வச்சிகினு
வாபசு வாங்கிகரேன் நானு

ஓபனா பைட்டு
போட்ர சிர்சுக வால்க
டைமு பாத்து
பின்னாடிருந்து
கமுக்கமா அடிக்குர
பெர்சுகலும் வால்க


Posted at 01:22 am by aappu
Comments (5)

Wednesday, April 14, 2004
டமில் நியு இயரு விஷ்ஷீ லிஸ்ட்டு

  1. ஹரிஹன்னாக்கி எல்க்கன காமால போயி எல்க்கிய சுரம் வர்னும். பிரசங்கன்னாட்ட டியுசனுபோயி ஹரிஹன்னா எல்க்கியம் கத்துகலாம்.
  2. ராமுறுக்கர்க்கு இந்த வர்சம் ஞாணபித்தம் கெடைக்கனும். காலசெவுட்ட வுட்டு ராமுறுக்கர அட்டாக் பன்ர அய்டியால இத எலுதல.
  3. காவிகச்சி சோனிகச்சி மூனாகானாகச்சி அம்மாகச்சினு காம்ரேட்டுகச்சி அம்மாம் கச்சியும் தலித்து பிரதமரை கொண்டுவர்னும். திருமாவளவன், கிருஷ்னசாமினு எண்டிபெண்ட்டா நிக்ர அல்லா தலித்து கேண்டிடேட்டும் கெலிக்கனும்
  4. ரைட்டர்பாரா இப்ப போயிகிர ஈஸ்ட்டு பப்லிஷ்சுல ரொம்பநாலிக்கி குந்திகனும். சிப்பிராயரு சிப்பிமாரி எலுதாம முத்துமாரி எலுதனும்.
  5. என்டர்நெட்டுல நெர்ய முகமூடிசு வந்து குந்திகினு டீசண்டா என்டர்டென்மெண்டு காட்டனும். குப்பனும் சுப்பனும் புலாகுல எல்கியஎல்கனகிருக்கெட்விஞ்ஞானபாலிடிரிக்சு அரிவு வலக்கனும்
  6. மாலன்க்கு மூனாகானாகச்சி எம்பி சீட்டு தர்னும். டமில்ல இல்லாத காவியம்னு ஜெயமோகனு டென் தவுசண்டு பேஜீக்கு எதும் எலுதாம இருக்கனும்
  7. ரம்னிதரன் புச்சா யாருகிட்டயும் சண்டபொடாம எல்க்கியம் வலக்கனும்
  8. லெங்கைல பீசு வர சுந்தரிகாவும் பொரபாகரனும் மன்சு வக்கனும்
  9. ரஜ்னி ராமதாசை தோக்கடிக்கனும் ராமதாசு ரஜ்னிய தோக்கடிக்கனும்
  10. அர்சியலு சினிமா டமிலுனு பிலிமுல மயங்கி நிக்காம டமிலன் அவன் பொலப்ப பாத்துகனும்

Posted at 12:06 am by aappu
Comments (7)

Thursday, April 08, 2004
வேதாளநந்தி வாசிக்குர வேதம் கேளு

கேன பசங்கலாம்
வேதாந்தினு
சொல்லிகிராங்கபா

ராமுகிலாசுதாசு வேதாளநந்தி
சீ
ராமுவிலாசுதாசு வேதாந்தி
பார்ட்டி போட்டோ
பாத்துகினனு வச்சிக்கோ
சென்ரல் ஜெய்ல
எஸ்கேப்புஆன தோஸ்துக்கு
நாமம் போட்ட கணக்கா கீராரு

ஏம்பா இப்டி திட்டுர
இன்னா பன்னாரு அவுருனு
காவிசட்டை கோஷ்டி
கம்பெடுத்துனு வரபோவுது

வேதாலநந்தி
வாய்வெச்சி கிராரு
ராகுலு
நேருகாந்தி பேமிலி நையாம்
பாரினரு சோனியாக்கு
சன்னு மட்டும்தானாம்

அப்பாலிக்கா அட்சிகிராரு ஜோக்கு
அம்மா கேட்டா
ஸ்ஸ்பீச்சு எய்த
அவர கூட்டிகுவாங்க
ராஜீவு செத்ததுக்கு
சோனியா ரீஜனாம்

அமேத்தி
பாரின் ரூல்ல கீதாம்
இவுரு ராகுல
எதுத்து நின்னதும்
பிரீடம் வந்துட்ச்சாம்

பட்ச்சா பிச்சுகினு
பிஜேபி இன்ட்லக்சுவல்க்கு
பேதி ஆவுரமாறி
அவுத்து காட்ராரு அரிவை

எலக்சுனுல நிக்கரியா
ஒன் தெரமை சொல்லு
இன்னா பன்னுவனு சொல்லு
ஆப்போசிட் கேண்டிடேட்
ஒன்னும் பன்னல
தொகுதிக்குனு சொல்லு
இப்டி டீசெண்டா
எம்மாம் மேட்டரு கூவலாம்
அத விட்டுட்டு
யாரு யாரு மகனுனு
வெளக்கு பிடிச்சு பாத்தாமாரி பேசுரது
வேதாந்திக்கு அலகா?

காவி கட்னவுங்க
மெஜாரிட்டிக்கு வந்தா
கலிமுத்தி போயிரும்ரதுக்கு
எக்சாம்புல் நய்னா
மோடியும்
வேதாளநந்தியும்

வேதாளநந்தி வால்க
அவரு பார்ட்டி வளக்குர
சுதேசியமும் வால்க
காவிகட்சிக்கு ஓட்டுபோட்டு
பட்டநாமம் சாத்திகர
பரமபக்தர்கலும் வால்க


Posted at 03:58 am by aappu
Comments (2)

Tuesday, March 30, 2004
ரஜினிசாமியாரு சாமியாட்ராரு

மவுனமா இல்ல
மோனமா இருக்காரு
அவுரு சாமியாரு
சொயநலம் இல்லாதவரு
நல்லவரு வல்லவரு
நாட்டுக்கு வேண்டியவருனு
விசிலடிச்சான் குஞ்சுக
சிலைடு போட்டுகினு நின்னாக
இப்போ சாமியாரு
லீல காட்ட
ஆரம்புச்சிருக்காரு

வன்னியரு கட்சியை
ஆரு தொகுதிலயும்
எதுக்க போராராம்
ஜாதி கட்சினு எதிர்க்கராருனு
அவசரபட்டு கிலாப்
அட்சிடாதீங்க
சாமியாரும்
சொயநலத்துக்குதான்
எதுக்கராராம்
கணக்கு பைசல்
பன்ரதுக்கு பன்ராராம்

காவிவேஷம் கட்டிகினப்பொவே
நென்ச்சதுதான்
சாமியாரு தாமரைலே
உக்காந்து தவம்பன்ன போராருனு
இப்போ ஆரம்பிச்சுருக்காரு
இனிமெல்பட்டுக்கு
தவமா பன்னுவாரு

அலெக்சு பாண்டி
பாட்சானு
பேனுக்கு
பட்டைநாமம் சாத்தரது
பேட்டைல
கலெக்சன் அல்ரதுக்குனு
ஜன்த்துக்கு தெரிஞ்சா சரி

டமில்சின்மா வால்க
டமில்சின்மா பன்ர
புரட்சி வால்க


Posted at 10:20 pm by aappu
Comments (8)

Saturday, March 27, 2004
பிலாசபிகல் பச்சொந்தி

அம்மாக்கு
ஸ்ஸ்பீச்சு எய்திதர
ஸ்ஸ்பீச்சு மாஸ்டர்சை
கொறசொல்ல மொடியாது
ஸ்டேஜி ஸ்பீச்சுல
கலஞருக்கி ஈகுவலா
அம்மாவ ஆக்கிடறதுனு
எய்திதள்றாமாறி கீது
கத கவித சீனு
திட்டுனு அம்மா
பேச்சுல ஸ்பாட்டு
வெச்சினு கீறாங்க
இப்டி பேசுறுதுக்கு
அம்மா இன்னா
குவாலிபிடுனு
கேட்டுகினனு வய்யி
ஆப்பு வெச்சுடுவாக

சோனியாக்கு
பதியும் தெரில
பக்தியும் தெரிலனு
சம்சாரத்துல
ஊரிதெலிஞ்சாமாறி
அம்மா அடிச்சது கீட்டம்

நம்ம காம்ரேட்டுகல
அம்மா
பிலாசபிகல் பச்சொந்தினு
சொல்லிபூட்டாக பா

இன்னாடா இது
டமாஷா கீது
கம்யூனிஷ்டுக
கொல்க சிங்கங்க
அவுங்கல இப்டி
அடிச்சுபூச்செ இந்தம்மானு
அடுத்த நியூசுக்கு
போனென் நய்னா

அதுல போட்டுகிரான்
மருதைல
அஞ்சாநெஞ்சன் அலகிரி
ஆதரவுபெற்ற
கம்யூனிஸ்டு கேண்டிடேடுக்கு
வோட்டுபோடுங்கனு
காம்ரேட்டுக
கூவிகினு கீராங்களாம்

அலகிரி இன்னசண்டுனெ
வெச்சிகொ அப்பு
மர்டர் கேசுல கீரவரு
சபோட்டு பன்ராருனு
மைக்போட்டு கூவரலெவலுக்கு
காம்ரேட்டுக போயிட்டாக

இன்னவோ போ
கோனாரு நோட்சுஅட்ச்சி
வல்லுவன்கே அவனவன்
கொரலு சொல்லிதராமாரி
காம்ரேட்டுக்கே அம்மா
கொல்க சொல்லிதராமாரி
ஆயிபோச்சு சிட்வேஷன்

பிலாசபிகல் பச்சொந்தி வால்க
பிலாசபி மைனஸ் ஆய்கின
அம்மா பச்சொந்தி வால்க


Posted at 04:32 am by aappu
Comments (1)

Tuesday, March 23, 2004
தந்தை பெரியார் வளியில்

கோளியடிச்சி
கொளம்பு
வெச்சிருக்கோம் இங்க
பொட்டையா சேவுலானு
பின்னால பாத்துகினுதான்
துன்னுவேன்ராராம்
கொசபேட்ட கொப்ஸாமி

வேனும்னா துன்னு நய்னா
வேனாம்னா
உன் புலாகுல
ஆப்பு தலைல
போடு மன்னு

தந்தை பெரியார்
மொகமூடிமாட்டிகினு எளுதிகீராரு
அப்டியெ
நெரிய் லீடர்ஸ்
எளுதி கீராங்கப்பு
அவுங்கலாம் ஆம்பிலியானு
எங்கயும்
கேட்டுவெச்சிடாத கொப்ஸாமி
டின்னு கட்டிருவாங்கோ

நீ கேக்கரனு
அவுத்துபொட்டுட்டா
ஆடமொடியும் கொசபேட்ட
அவுத்துபோட்டு
ஆடுரது கவுரவகொரச்சல் இல்ல
ஆப்இண்டியாவே
வறுமையிலெ
அரநெர்வானமா நிக்குது
அவுத்துபோட்டு ஆடுரதுக்கும்
ஞாணம் வேனும் ராசா
நாங்க திகம்பரரு இல்ல
ஏதோ எங்க லெவலுக்கு
டீசண்டா
பெரியார் மொளில
ஆப்பு வெச்சிகினு கீரோம்
கருத்து சொதந்தரம்னு
இண்டீசன்டா
ஆப்பை திட்னாலும்
கமண்டு வன்ச்சினாலும்
அலவ்பன்னினு கீரம்

அய்யாலருந்து
கொசபேட்டவரிக்கும்
ஆப்பு படிச்சிகினு
பேசிகினுகீரதே
ஆப்பு வேல செஞ்சமாறிதான்
வேனும்னா
நீயும் பதிலுக்கு
ஆப்புவய்யி அப்பு
ஆனாக்கி
இண்டீசண்டா அவுத்து
காட்டசொல்லாத

தந்தை பெரியார் மொளியிலும்
தந்தை பெரியார் வளியிலுமே
ஆப்பு வெச்சிகினு வரோம்

எம்மை எதிர்ப்போர்
தந்தை பெரியாரை எதிர்ப்போர்
தாய்டமிலை எதிர்ப்போர்
எம் குரலை
அடக்க முயல்வோர்
எம் மக்களை
ஒடுக்க முயல்வோர்

இப்படிக்கு
தந்தை பெரியார் வளிநடக்கும்
சித்தப்பு ஆப்புஸ்


Posted at 10:23 pm by aappu
Comments (3)

Next Page