ஐயா நாமம் வால்க
அவர்சொல்படி
முத்தமிழ் எழுதபோகும்
சேஷாத்திரி நாமம் வால்க
அப்டியே
இங்கிலீஷ்காரன் விளையாட்டு
கிரிகெட்டை அபீட்டில் விட்டு
டமில்மர விளையாட்டு
சடுகுடுக்கு மாறிடுக
blogஐவிட்டு
கல்வெட்டில் பொறித்திடுக
முடியாதென்றால்
ஐயா பொழுதுபோகாமல்
டமிளுக்கு பேன்பார்க்கும்போது
கிரிகெட் வேர்ட்ஸாவது
டமிலில் வாங்கிபோட்டு
டமில்கிரிக்இன்போ
வைத்திடுக
டமிளு வால்க
டமிளு வால்க
Posted at 08:14 pm by aappu
இன்னய திகதிக்கு
கவிதைக்கு
ஆப்பு வைக்க
நாம் தேவையில்லை
துடைத்து போடுகிற
காயிதத்தில்
கிறுக்கி அனுப்பினாலும்
கவிதையென்று போட்டு
ஆப்பு வைக்கிறது
திண்ணை
பேசுவது
துப்புவது
கழிவது
எல்லாம்
கவிதையென்று
தினம் ஐம்பது
அவிழ்த்துவிட்டு
(கவிதைதாங்க)
ஆப்பு வைக்கிறார்
புஹாரி போன்றோர்
பசையுள்ள பார்ட்டியிடம்
பைசா வாங்கி
கவிதைபுக் போட்டுதந்து
பாக்கெட்
நிரம்பியபின்
i hate kavithai என்று
unrepentedly சொல்லி
அண்ணன் ரைட்டர்பாரா
கவிதைக்கு வெச்ச ஆப்பு
ரொம்பவே பெரிய ஆப்பு
இவற்றினூடே
இன்னொரு ஆப்பு
உஷா
கவிதை எழுத
தொடங்கிவிட்டார்
கவிதைக்கு வந்த
சோதனைகளுக்கு
இது பெரிசில்லைதான்
சின்னசோ பெரிசோ
ஆப்பு ஆப்புதானே
அதான் சொல்லிபுட்டோம்
Posted at 12:26 am by aappu
மொழியும் மதமும்
இனமும் மயிரும்
வேலைக்குஆகாத
வெற்றுபேச்சு
கஞ்சியில்லாத கவலை
மறந்தாச்சு
காட்டுமிராண்டியாக்கும்
மொழிநாய்றுகளுக்கும்
அடிமையாக்கும்
மதபோஷனைகளுக்கும்
அவற்றின்
துஷ்டபிசாசுகளுக்கும்
பெரியார் பேரால்
பெரிய ஆப்பு
Posted at 08:08 pm by aappu
A Bக்கு ஆப்பு
B Aக்கு ஆப்பு
Aவும் Bவும் சேர்ந்து
A to Zக்கு ஆப்பு
Posted at 08:34 am by aappu
மரத்தடிக்கு ஆன
வெண்பாபேதியில்
மூளைகலங்கி
அசைவிழுங்கி
dehydrateஆகி
நவீனவெண்பாவுக்கு
எம்
முதல் ஆப்பு
by கழுதைமுத்து
நவீனவெண்பா பற்றி 'சன் டிவி புகழ் கவிஞர்' கழுதைமுத்து-
நேரிருக்கும்
நிரையிருக்கும்
பொருளிருக்காது
தளையிருக்கும்
ஒற்றிருக்கும்
திருப்திதராது
Posted at 07:34 am by aappu
வெப்பில் பிலிம்
ஓவராய் காட்டுபவர்க்கும்
ஊர்வதை ஊதி பெரிதாக்கி
பறப்பதாய் சொல்பவர்க்கும்
சான்ஸ் தேடித்தேடி
சந்திலே சுயபுராண சிந்து பாடுபவர்க்கும்
இலக்கிய சுக்கை
இடித்து குடித்துவிட்டதாய்
இறுமாந்து இருப்பவர்க்கும்
இலக்கண பேய்பிடித்து
தலைகனம் ஏறியவர்க்கும்
ஆரிய திராவிட மாயையில்
அல்லலுற்று உழல்பவர்க்கும்
தலித்தை சுரண்டியபடி
தலித்தியம் பேசுபவர்க்கும்
பெண்டாட்டியை மதிக்காமல்
பெண்ணியம் பாடுபவர்க்கும்
ஜால்ரா அடித்தபடி
ஜோரா கைதட்டுபவர்க்கும்
தமிழ் வாந்தி
தமிழ் மலஜலம் கழிக்க சொல்வோர்க்கும்
முற்போக்கு பேசுகிற
பிற்போக்குவாதிக்கும்
இலவசமாய் எமது பிராண்ட்
'தமிழ் ஆப்பு' வைக்கப்படும்.
Posted at 05:57 am by aappu