மார்க்ஸிஷ்ட்டும் மாடர்னும்
மாஸ்கோல மழபெஞ்சா
மடுரைல கொடைபுடிப்பாங்கனு
கம்யூனிஷ்ட்டுகல சொல்வாங்க
மாஸ்கோ வுழுந்தபொறகும்
மாடர்னு ஆகாம
கட்டுபெட்டிகளாவே இருக்காக
நம்ம கம்யூனிஷ்டுக
மாறினகீறது மாத்தம்
மட்டுமில்ல சுர்சித்து தாத்தா
மார்க்ஷிஷமும்தான்
மண்ணுக்கேத்தமாறி
மாத்திகலனா மார்க்ஷிஷம்
இம்போர்ட்டட் ஐய்ட்டம்மாறி
பிகினிங்ல கலர்காட்டி
அப்பால பேடுஆய்கும்
இண்டியாலே
கம்யூனிஷ்ட்டுக
இம்போர்ட்டட் அயிட்டம்சாதான்
இன்னம் கீறிங்க
தேர்தல் அறிக்கை
வுட்டிருக்காரு
சுர்சித்து தாத்தா
நல்ல தாத்தாதான்
இன்னா மேட்டர்னா
அடுத்தவன் சொத்துக்கு
ஆசபடறவன் நாட்டுல
சொத்தை கட்சிக்கு எளுதிட்டாரு
ஆனா கட்சியை
சீனாக்கும் ரஷ்யாக்கும்
எளுதிட்டாரோனு தோனுது இப்போ
சீனாகாரன்கிட்டயும்
ரஷ்யாகாரன்கிட்டயம்
நல்லுறவு வளப்பாராம்
பாகிஸ்தான்காரனை
பாகெட்லபொட்டு
வெச்சிகினு அவுனுக்கு
ஆட்டம்பாம்
தந்துனு கீறான் சீனாகாரன்
நாத்தீஷ்டுல
நாலு ஸ்ஸ்டேட்டு
சேத்து எத்துகோனா
நல்லுறவு வளப்பான்
ரஷ்யாகாரன்
அவன்பாடே அவுனுக்கு
தெண்டாட்டம்
வெளிநாட்டு வாரு
உள்நாட்டு வாரு
எதும் நெறுத்த தெரில
அவனுக்கு நய்னா
நம்ம சப்போட்டுதான்
அவுனுக்கு
தேவ இப்போ
நெக்ஸ்டு சொல்லிகீறாரு
கெவுர்மெண்டு எம்ப்லாய்ஷ்
ஸ்டைரைக்கு பண்ண
பர்மிஷன் தருவாராம்
வாங்கற சம்பளத்துக்கும்
கிம்ளத்துக்கும்
வேலைபண்ண
அவுங்ககிட்ட
பர்மிஷன்வாங்கி
தரனும் தாத்தா பஸ்ட்டு
கிம்ளம் வெட்டினால்ம்
வேல ஆகல நேரத்ல்
கெவுர்மெண்டு ஏஜன்சில
தாத்தாக்கு எங்க
தெரிபோது இதல்லாம்
உல்க லெபர்ஷ்ஷை
ஒன்னு சேருதாத்தா
அப்டியே
இண்டியாலெ
இருக்ற மார்க்ஷிஷ்டுகல
ஒன்னு சேத்து
மாடர்னு ஆக்கு
மண்க்கும்
மொரபுக்கும்
டைம்க்கும்
ஏத்தாமாறி
டேன்ஷ்ஆடிகினு
மாறினேகீறது
மனுஷன் மட்டும்இல்ல
மார்க்ஷிஷமும்தான்
மார்க்ஸ் வால்க
மாடர்னு ஆகாத
இண்டிய
மார்க்ஷிஷ்டு வால்க
Posted at 08:38 am by aappu
ஐமூடி கோரசுபாடும் ஐகோரசு அண்ணாச்சி
[இண்டர்நெட் கலவரத்தை துடர்ந்து பெசல் எடிசன் நய்னா இது]
ஐமூடி கோரசுபாடும் ஐகோரசு அண்ணாச்சி
ஐதொறந்து பாத்துவருசம் ரெண்டாச்சி
புலிஒன்னு எலியான கதை
ஐகோரசு அண்ணாச்சி கதை
காபிகடெய்ல சேந்த புதுசுல
நெத்திகண்ணு துறந்தாலும் குத்தமேனு
சுத்திசுத்தி வந்தாரு
அட்ஜஸ்ட்பண்ணி அட்ஜஸ்ட்பண்ணி
ஆசாமிகள சுத்தபோயிட்டாரு
பொங்கியெழு மவரேன்னு
முருகரு
ன் இல்லப்பு ரு தான்
கோர்ட் நோட்டீசு
ஜால்ரா கெளப்புல
ஒட்ட போராருனு
பாத்துகினுஇருந்தா
ஐகோரச அனுப்பிவெச்சி
அடுத்தகத
அவுத்து வுடறாரு
என்க்கி ஒரு டவுட்டு நய்னா
குரூப்புல நடக்குறதுக்கு
நோட்டீசு
அனுப்பரதுன்னா
யாஹீக்குதானே
பஸ்ட் அனுப்பனும்
இல்லனா
கெளப்புல நடந்ததுக்கு
கெளப்பு மக்கலுக்கு
தலித்து முன்னனி
நோட்டீசு
அனுப்பிடபோவுது
இன்னாவோ போ
அவனவன்க்கு
டேஞ்சர்னா
கருத்து சொதந்துரத்துக்கே
ஆப்பு வெக்கராங்க
வேஸ்ட்டு பண்டிட்டு
பொறுத்தது போதும்
நீராவது பொங்கிஎளும்
அந்த மெய்ல்லாம்
போடப்பு
மதியக்கா
நீயாவது போடகுடாதா
ரெண்டுபேராவது என்னை
படிக்குறாங்களேனு
தென்னைல
மொய்சிலித்துபோனாரு
முருகரு
இப்போ
டமில்நாடே
புன்னால நிக்கரமாரி
புலிம் காட்ராரு
கோரசுக்கு கூட
ஐகோரசு
கோரசுபாத்து நாளாச்சு
ஐகோரசு பாடவேனும்
அதிகமான கோரசு
அதுகேட்டு
பொறக்கவேனும்
கருத்து சொதந்தர
தாலாட்டு
ஐகோரசு வால்க
அடிக்கடி
பிளேட்டு மாத்தும்
அண்ணாச்சி முருகரும் வால்க
Posted at 12:26 am by aappu
பண்டிட் வாங்குன வெச்ச ஆப்பு
பண்டிட்
ஷிவ்கொமாருக்கு
செமஆப்பு
தெண்ணைல
பிராமின்ஸ்க்கா
ஓவரா குதிச்சாரு
பிராமின்ஸ் சேந்து
ஆப்புமேல ஆப்பு
வெச்சிட்டாங்க
போட்டி நடத்தமுடியாம
போட்டு தாக்கிட்டாங்களாம்
இப்போ பொலம்புறாரு
குரூப்பும்
புளாகும்
ஒரு குட்டையில்
ஊறியமட்டைனு தெரியாம
புதுமை பண்றன்னுபோயி
நோஸ்கட்டாயி நிக்குறாரு
அரசியல்வாதி மாறுவான்
அரசாங்கம் மாறாதுன்றமாறி
குரூப்பு மாறும் அப்பு
ஜால்ரா மெம்பர்ஸ் சேம்தான்
அவுன் அவுனுக்கு
அஜண்டாஇருக்கு நய்னா
நீ ஒண்ணும்
கிளிக்க முடியாது
பண்டிட்டுமாறி
எல்க்கியசேவைனு
எறங்கறவருக்கெல்லாம்
நல்லபாடம் இது
மதியக்கா
அடுத்துவந்து
ஹரிஹண்ணா
பிகேஎஸ்அண்ணா
ஆசாத்அண்ணா
எல்லாம் என்தவறு
மன்னிக்கவும்னு சொல்லி
ஊத்தி மூடபோறாங்க மேட்டர
ஊழலு எதிர்ப்பு இயக்கம்
ஸ்பான்ஸரு
சேஷாத்திரி அய்யங்காரு
இன்னா சொல்லபோறாருனு
தெரியல
முருகன் பண்ண கண்றாவிகெல்லாம்
பொல்லாப்பு நமக்கெதுக்கப்புனு
காசி இன்னேரம்
வூட்டுக்குள்ள
பூட்டு போட்டுகினாராம்
பண்டிட்டும்
ஆப்பு வெச்சிகிறாருதான்
மத்தவன்லாம்
நாக்கபுடுங்கி சாவறமாறி
கேட்டுருக்காரு
வளக்கம்போல
பக்கம் பக்கமா
கதய சொல்லிட்டாரு
ஜால்ராகளுக்கு
எங்க ஒறைக்கபோது
பெரியாளுங்க தயவுல
ரெண்டெழுத்து
பிரிண்டுல பாக்க
அலயற கூட்டம்
ஹரிஹண்ணா
சொயமரியாத சிங்கமாம்
அப்டினா
டைனோவ ஏன் காச்சனும்
குட்டிஹமாமுலே ஏன் குளிக்கனும்
டைனோகிட்ட
பேசுற டோனுல
தில் இருந்தா
குட்டிஹமாம் மொகமூடிகிட்டயும்
பேசசொல்லேன் ஆசாத்து
மாலன்கிட்ட
ஆப்புவாங்கவுட்டமாறி
குட்டிஹமாம்கிட்டயும்
ஆப்புவாங்க வுட்றுவாங்கனு
செங்கத்துக்கு சொரணஇருக்கு
பண்டிட்டும்
புலிம் காட்டுறாருப்போ
மெயில் பப்ளிக்ள
போடுறேன்
போடுறேங்கறாரு
போட்டபாட்டை காணம்
பயமா இருந்தா
நமுக்கு அனுப்பிவுடசொல்லு
ஆப்புல போட்டுடலாம்
பண்டிட்டு வால்க
பண்டிட்டுக்கு
பாடம் பொகட்டிய
ஜால்ரா
குரூப்பு வால்க
Posted at 01:25 pm by aappu
பெரியவா பெருமாளுக்கு போட்ட நாமம்
காஞ்சி ஜெயந்திரா
தெறமை தெரியாதவுங்க
இருக்க முடியாது
அவுரு
தெறமை காட்டாத
ஏரியா கெடையாது
நாம
ஸ்ஸ¤மாலு ஸ்ஸ்கேலுல
ஹியூமன்ஸ்ஸீக்கு
ஆப்பு வெச்சிகினு இருந்தா
அவுரு
சாமிக்கே ஆப்புவெக்கிற
அபூர்வ செகாமணி
ரன்னிங்லே கூட
பஸ்ட் வந்திருக்காரு
ஒருதபா
அந்த வருஷம் காட்டி
ஒலிம்பிக்குல
ஓடிருந்தார்னா
இண்டியாக்கு
மெடலு அள்ளிருப்பாரு
அப்பப்போ
அரசியல நாறடிப்பாரு
அத்வானிலருந்து
அம்மாவரைக்கும்
அருள்கடாட்சம் தருவாரு
அறிவுஜீவி சோக்கும்
சட்டஜீவி சேஷனுக்கும்
ஆசானு அவருதான்
இதோ தீந்துச்சி
பாப்ரி மஸ்ஜித் மேட்டருன்னு
ரெப்ரியா நின்னு
விஎச்பிக்கு கோல்போட
பார்த்தாரு
சினிமா ஆக்ட்ரஸ் கணக்கா
பேப்பருல
அவுரு பேரு
வந்துட்டே இருக்கனும்னு
அவுருக்கு ஆசைப்போ
திருப்பதி பெருமாளுக்கு
பூஜை புனஸ்காரம்
ஆகாமபடி நடக்குதா
இதான்பா மேட்டரு
நாட்டு முன்னேட்டதுக்கு
முக்கியமான மேட்டராம்
ஜெகத்குரு ஆரம்புச்சி
வெச்சிருக்காருன்னு
பேப்பர்காரன் பொகையறான்
பெருமாளு பேருசொல்லி
எத்தினி
அனுமாரு சாப்பிடுதுங்கோ
அதெல்லாம்
அய்யாமாருங்க
கண்ணுக்கு தெரியிலியா
ஒருவேளகூட
ஒண்ணும் கெடைக்காம
எத்தினிபேரு கீறான் நாட்டுல
அவனையெல்லாம் பத்தி
யாரு பேசபோறாங்க
காஞ்சிகாரரு டேக்ஓவர்
பண்ணிடுவாருன்னு பயத்துல
மத்த
காஞ்சிபோன சாமியாரெல்லாம்
வாயுல வவுத்துல அடிச்சிகிறாங்க
அரசியல் கெட்டுச்சு போங்க
அப்டியாபட்ட
கூத்து பண்றாங்கோ
இந்த சாமியாருங்கோ
இப்போல்லாம்
ஜெகத்குரு
ஜெகஜால கில்லாடி
பாலாஜி எங்கவூட்டு சாமி
அவுருக்கு நானு ஓகே
எனுக்கு அவுரு ஓகேன்னு
சர்டிபிகேட் கொடுத்துட்டாரு
அப்டியே
பேப்பர்காரன் பாத்து
எழுதணும்னு
எலவச எணப்பா
அட்வைஸ் வுட்டிருக்காரு
குரு பேரை
கெடுக்கறதுக்குன்னே
இப்டி
ஒரு சிஷ்யன்
சாமியாரு எப்டி
இருக்கனும்னு
எப்போ
கத்துக்க போறாரோ
பெருமாளுக்கு கோயிந்தா கோயிந்தா
பொதுஜன்த்துக்கும் கோயிந்தா கோயிந்தா
கொறிப்பு: இந்த போஸ்டிங்கையோ லிங்கையோ யாஹீ குரூப்பு பக்கம் யாரும் போட்டீங்கன்னா நானு அதுக்கு ஜவாப்தாரில்ல. முன்னால ஒருத்தரு காஞ்சிகாரை பேருசொல்லி எழுதனுதுக்கே ஒரு எடத்துல பெருசாஆஆஆ ஆப்பு வெச்சிட்டாங்களாம். உஷாரய்யா உஷாரு.
Posted at 06:02 pm by aappu
எல்க்கியம்னா
அர்த்தம் பூட்டு
எடக்கரடக்கல்
கணக்காச்சு
எல்க்கியம்னு சொன்னாலே
பேஜாரா பூடுறமாறி
எல்க்கியத்தை
பண்ணிபோட்டாங்க
லாண்டிரி கணக்கெளுதி
கவிதைங்கறாங்கோ
பேனா புடிச்சவன்லாம்
பெருமாள்ங்கறாங்கோ
ஒத்த ஆளா
மூச்சாபோனா கூட
மாபெரும் மூச்சானு
பேனர் வெச்சுகிறாங்க
டுபாயிலே
மாபெரும்
எல்க்கிய வெழா
தின்தந்தி நாதன்
ராணி அ.மா.சாமி
அக்காங் நய்னா
குடும்ப பத்திரிகைனு போட்டு
குஜால் மேட்டரு வருமே
அந்த ராணிதான்
கல்கண்டு டுப்பறியும்
லேனா டமில்வாணன்
செறப்பு அளப்புலவந்து
எல்க்கியம் அளக்கறாங்களாம்
எல்க்கியத்துலே இவங்களாம்
இன்னா பண்ணாங்கோன்னு
கேட்டீங்கனா
டமில் டுரோகி ஆப்பு
வெச்சுடுவாங்க
எல்க்கியம் தெரிலனாலும்
எலக்கனம் தெரிஞ்சாளை
கூப்புட்டு டமில்ல
வூடுகட்டி ஆடவுடுவாங்கோ
கொஞ்சம்பேரு
டுபாயிலே அதும் காணோம்
இல்ல
இதான்
எல்க்கியத்துலே கட்டுடைப்பா
இண்டர்நெட்ல வளர்ர
எல்க்கியத்துக்கு
இதுமேல்னு சொல்றாங்களா
எப்டியோ
எல்க்கியம் வளந்தா சரி
டுபாய் டமில்ஸ்
எல்க்கியம் வளக்கறது
பாத்து எனிமி
எஸ்கேப்பாம்
டமிலன்னை
எஸ்கேப்பு ஆவாம
புரியாணி போடுங்க
வால்க எல்க்கியம்
வால்க டமில்
Posted at 06:02 pm by aappu
கோத்ராவில் எரிந்த
நெருப்பில் ஜெயித்த
மோடி முகத்தில்
இண்டியா ஒளிர்கிறது
காஞ்சி ஜெகத்குரு காலடியில்
கிடக்கும் கட்சிகளில்
இண்டியா ஒளிர்கிறது
சோனியாவை சுற்றிவந்து
சொந்தங்களை முன்னிறுத்தும்
காங்கிரஸ் சாதனையில்
இண்டியா ஒளிர்கிறது
அத்வானியின்
ஆர்எஸ்எஸ் டிரவுசரில்
இண்டியா ஒளிர்கிறது
அம்மா வீட்டு ரெய்டில்
அகப்பட்ட நகைகளில்
இண்டியா ஒளிர்கிறது
அறிவாலயத்து சுவர்களில்
வழியும் தொண்டன் வியர்வையில்
இண்டியா ஒளிர்கிறது
திண்ணியத்தில்
தலித் மலம் தின்றதை
வேடிக்கை பார்த்த
வேதனையில்
இண்டியா ஒளிர்கிறது
தலித்துக்கு குரல்குடுத்தால்
ஜாதிகட்சி என தள்ளி
வன்னியர் தோளில் கைபோட்டு
ஓட்டுபொறுக்கும் கலைஞரிடம்
இண்டியா ஒளிர்கிறது
தொழிலாளிக்காக போராடி
கூட்டணிக்காக விலைபோகும்
காம்ரேடுகள் குரலில்
இண்டியா ஒளிர்கிறது
காவேரிக்காக அடித்துகொண்டு
சிந்துகிற ரத்தத்தில்
இண்டியா ஒளிர்கிறது
வெள்ளையுடுத்தி
ஓட்டுகேட்டு
மக்கள்வாழ்வை
கறுப்பாக்கும்
அரசியல்வாதி கைகளிலே
இண்டியா ஒளிர்கிறது
ரஜினி வருவார் எனஏங்கி
சினிமாகொட்டகை முன்னாலே
சீக்கி அடிக்கும் இளைஞனிலே
இண்டியா ஒளிர்கிறது
கோஷாபோடும் பெண்ணுக்கு
சமஉரிமை இல்லை என்னும்
அறிவுஜீவி இமாம்களில்
இண்டியா ஒளிர்கிறது
இருக்கிறஜாதி கைகோர்த்து
இல்லாதஜாதியை அடிப்பதிலே
இண்டியா ஒளிர்கிறது
நீ
இண்டர்நெட்டில் கவியெழுதி
இருப்பை தக்கவைத்துகொள்
கிரிக்கெட்பார்த்து கைதட்டி
கனவில் உன்னை தொலைத்துகொள்
ஓட்டுபோடும் நாள்வந்தால்
வீட்டில் தங்கி
நீ தின்று
டிவி பார்த்து
பின் தூங்கு
Posted at 06:00 pm by aappu
வந்தநாள்முதல்
இந்தநாள்வரை
மரத்தடி மாறவில்லை
அதன்
மனிதர் வளரவில்லை
ஒன்றா இரண்டா
மரத்தடி வைரஸ்ஸஸ்
பிகினிங்கிலே
குண்டுசட்டிலே
குதிரைஓட்டிய வைரஸ்
அதுக்குஅப்பால
அண்ணாச்சிஸ்
லீட்பண்ணி
தங்காச்சிஸ்
பாலோபண்ணவைரஸ்
எலக்கனவைரஸ்
பாட்டிமன்றவைரஸ்
எல்க்கியவைரஸ்
பண்டிட்
ஷிவ்கொமார்வைரஸ்
வம்புவைரஸ்
ஒன்லைனர்வைரஸ்
கலாய்ச்சல்வைரஸ்
நியூமராலஜிவைரஸ்
வெண்பாவைரஸ்
வைரஸ் இல்லாமல்
வாழ்க்கையில்லை
வைரஸ் மட்டுமே
வாழ்க்கையுமில்லை
Posted at 10:45 pm by aappu
அச்சுபிச்சு
சொச்டிக்கு சுரேச்சு
அப்பப்போ
ஸ்ட்ரெயிட்டு சிக்ஸீ
அடிப்பாரு
அப்பாலிக்கா
பழையமாறி தடவுவாரு
லேட்டஸ்ட் தடவல்
பிளாகுலே
முதுகு சொறியதை
பார்த்து
விசனபட்டுபோனது
சொச்டிக் குடிக்கிற
கோப்பி ஷாப்புலே
முக்காவாசி நேரம்
எல்லோரும்
உருவி உருவி
மசாசு பண்றதை
மறந்துட்டியே அப்பு
குருப்போ
பிளாகோ
எல்லாம்
ஒரு குட்டையில்
ஊறிய
மட்டை
எந்த மட்டை
எவ்ளோ ஊறிச்சுனுதான்
அவனவன் அடிச்சிகிறான்.
Posted at 08:28 pm by aappu
a) பாரதிய பாஷா பரிஷத் பரிசுவுக்கு உங்களை தேர்ந்தெடுத்த குழுவில் யார் இருந்தது
b) எந்த காரணத்துக்கு உங்களுக்கு பரிசு அளிக்கபட்டது
Posted at 08:20 am by aappu
ஐயா நாமம் வால்க
அவர்சொல்படி
முத்தமிழ் எழுதபோகும்
சேஷாத்திரி நாமம் வால்க
அப்டியே
இங்கிலீஷ்காரன் விளையாட்டு
கிரிகெட்டை அபீட்டில் விட்டு
டமில்மர விளையாட்டு
சடுகுடுக்கு மாறிடுக
blogஐவிட்டு
கல்வெட்டில் பொறித்திடுக
முடியாதென்றால்
ஐயா பொழுதுபோகாமல்
டமிளுக்கு பேன்பார்க்கும்போது
கிரிகெட் வேர்ட்ஸாவது
டமிலில் வாங்கிபோட்டு
டமில்கிரிக்இன்போ
வைத்திடுக
டமிளு வால்க
டமிளு வால்க
Posted at 08:14 pm by aappu